Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Pegasus வேவு நச்சுநிரல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நாடுகள்

உலகின் சில நாடுகளின் நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசாங்கத் தலைவர்கள் மீது Pegasus spyware எனும் இஸ்ரேலிய வேவு நச்சுநிரல் (Malware) பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டுவருகின்றன.

வாசிப்புநேரம் -
Pegasus வேவு நச்சுநிரல் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நாடுகள்

(படம்: AFP)

உலகின் சில நாடுகளின் நிருபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசாங்கத் தலைவர்கள் மீது Pegasus spyware எனும் இஸ்ரேலிய வேவு நச்சுநிரல் (Malware) பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டுவருகின்றன.

NSO குழுமத்தின் Pegasus நச்சுநிரலைப் பயன்படுத்துவதன் வழி, கைத்தொலைபேசிகளின் கேமராவையும், ஒலிபெருக்கியையும் (microphone) வல்லந்தமாகச் செயல்படுத்தமுடியும்.

அதன் மூலம், தரவுகளையும் சேகரிக்கமுடியும்.

அண்மையில், அந்த நச்சுநிரல் இலக்காகக் கொண்டிருக்கக்கூடிய சுமார் 50,000 பேரின் பட்டியல் கசிந்தது.

Amnesty International, பிரெஞ்சு ஊடகமான Forbidden Stories ஆகியவை மற்ற சில ஊடக நிறுவனங்களுடன் சேர்ந்து பட்டியலை ஆராய்ந்து, வெளியிட்டன.

ஹங்கேரி(Hungary), இஸ்ரேல், அல்ஜீரியா (Algeria) ஆகியவை, நச்சுநிரல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளன.

பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron), தம்முடைய கைத்தொலைபேசியையும் தொலைபேசி எண்ணையும் மாற்றியுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை, நச்சுநிரலின் பயன்பாட்டில் தாங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளன.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்