Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எங்கேயும் எப்போதும் நம்முடன் இருக்கும் திறன்பேசி வேவு பார்க்கப்பட்டால்?... Pegasus வேவு நச்சுநிரல் சர்ச்சை

17 செய்தி நிறுவனங்கள்... 80க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள்...

வாசிப்புநேரம் -
எங்கேயும் எப்போதும் நம்முடன் இருக்கும் திறன்பேசி வேவு பார்க்கப்பட்டால்?... Pegasus வேவு நச்சுநிரல் சர்ச்சை

(கோப்புப் படம்: REUTERS/Kacper Pempel/Illustration)

17 செய்தி நிறுவனங்கள்... 80க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள்...

ஒருங்கிணைந்து மேற்கொண்ட புலனாய்வு தான் The Pegasus Project என்ற திட்டம்...

அவர்கள் கண்டுபிடித்தது தான் என்ன?

Pegasus spyware எனும் வேவு நச்சுநிரல் (Malware), செய்தியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் ஆகிய நூற்றுக்கணக்கானோரின் திறன்பேசிகளைக் குறி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதை அடுத்து, பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

Pegasus வேவு நச்சுநிரல் என்றால் என்ன?

அது NSO என்ற இஸ்ரேலிய நிறுவனத்திற்குச் சொந்தமானது.

குற்றவாளிகள், தீவிரவாதிகள் ஆகியோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதே அதன் நோக்கம் என்கிறது NSO.

மனித உரிமைகளை மதிக்கக்கூடிய நாடுகளின் ராணுவம், சட்ட அமலாக்க அமைப்புகள், உளவு அமைப்புகள் ஆகியவற்றுக்கு மட்டுமே அது வழங்கப்படுவதாக நிறுவனம் கூறியது.

Pegasus வேவு நச்சுநிரல் எப்படிச் செயல்படுகிறது?

iPhone, Android ஆகிய திறன்பேசிகளை அது குறி வைக்கிறது.

எந்தவொரு ஆவணத்தையோ இணையத்தளத்தையோ திறக்காமலேயே, அந்த நச்சுநிரலைத் திறன்பேசியில் பதிவு செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

அந்த வேவு நச்சுநிரலால் பாதிக்கப்பட்ட திறன்பேசிகளில் உள்ள குறுஞ்செய்திகள், படங்கள், மின்னஞ்சல்கள், காணொளிகள் என அனைத்தையும் NSO வாடிக்கையாளர்களால் ஒரு சில நிமிடங்களில் காண முடியும்.

மேலும், திறன்பேசியின் ஒலிபெருக்கியையும் கேமராவையும் ரகசியமாக இயக்க முடியும் என்றது Washington Post செய்தி நிறுவனம்.

பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் சில முக்கிய நபர்கள்?

--பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron)
--ஈராக் அதிபர் பர்ஹாம் சாலி (Barham Salih)
--தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமஃபோஸா (Cyril Ramaphosa)
--பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan)
--மொரோக்கோ மன்னர் முகமது VI (Mohammed VI)

NSO நிறுவனம் என்ன சொல்கிறது?

தனது வேவு நச்சுநிரல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நிறுவனம் கண்காணித்து வருவதாக அது சொன்னது.

வேவு நச்சுநிரல் தவறாகப் பயன்படுத்துவது தெரிய வந்தால், அந்த வாடிக்கையாளரின் கணக்கு ரத்து செய்யப்படும் என்று அது தெரிவித்தது.

மேலும், கசிந்த பட்டியலில் உள்ள 50,000 பேரும் Pegasus கொண்டு வேவு பார்க்கப்படவில்லை என நிறுவனம் குறிப்பிட்டது.

சட்டத்தை மதிக்கும் குடிமக்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை வேவு பார்க்கத் தடை விதித்துள்ளதாக அது சுட்டியது.

உலக நாடுகள் என்ன சொல்கின்றன?

ஹங்கேரி (Hungary), இஸ்ரேல், அல்ஜீரியா (Algeria) ஆகிய நாடுகள் விசாரணை நடத்தவுள்ளன.

திரு, மக்ரோன், தம்முடைய கைத்தொலைபேசியையும் தொலைபேசி எண்ணையும் மாற்றியுள்ளார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவை, நச்சுநிரலின் பயன்பாட்டில் தாங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்