Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இரு பெங்குவின் குட்டிகளை வரவேற்றுள்ள மெக்சிகோவின் விலங்குத் தோட்டம்

மத்திய மெக்ஸிகோவில் உள்ள குவாடலஹாரா (Guadalajara) விலங்குத் தோட்டம், இரு பெங்குவின் குட்டிகளை வரவேற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
இரு பெங்குவின் குட்டிகளை வரவேற்றுள்ள மெக்சிகோவின் விலங்குத் தோட்டம்

(படம்: AFP)


மத்திய மெக்ஸிகோவில் உள்ள குவாடலஹாரா (Guadalajara) விலங்குத் தோட்டம், இரு பெங்குவின் குட்டிகளை வரவேற்றுள்ளது.

Adelie பெங்குவின் வகையைச் சேர்ந்த இரு குட்டிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விலங்குத் தோட்டத்தில் பிறந்தன.

ஆனால், இந்த வாரம்தான் அவை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

இதுவரை, பெற்றோர் பிளாங்கெட்டா (Blanquita), பிப்பின் (Pippin) ஆகியவை கால்களுக்கு நடுவே வைத்துக் குட்டிகளைப் பராமரித்து வந்தன.

(படம்: AFP)

இந்த வாரம், குட்டிகள் தானாக நடந்து செல்ல அவற்றின் பெற்றோர் அனுமதித்துள்ளன.

அண்டார்க்டிகாவின் சுற்றுச்சூழலைப் போலவே பெங்குவின்களின் இருப்பிடம் உருவாக்கப்பட்டதை அடுத்து லத்தீன் அமெரிக்காவில் முதல்முறையாக Adelie பெங்குவின்கள் குட்டிகளை ஈன்றெடுத்துள்ளன.

(படம்: AFP)

இன்னும் சுமார் 10 வாரங்களில் குட்டிகளுக்கு மருத்துவச் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

அவை ஆணா பெண்ணா என்று சோதனைகளின் மூலம் தெரியவரும். அதன்பின் அவற்றுக்குப் பெயரிடப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்