Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Facebook இல் விளம்பரம் செய்வதை நிறுத்திய நிறுவனங்களின் பட்டியலில் Pepsi-யும் இணைந்தது

பெப்சிகோ நிறுவனம் (PepsiCo Inc) Facebook சமூகத் தளத்தில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாய் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
Facebook இல் விளம்பரம் செய்வதை நிறுத்திய நிறுவனங்களின் பட்டியலில் Pepsi-யும் இணைந்தது

(கோப்புப் படம்: REUTERS/Mario Anzuoni)

பெப்சிகோ நிறுவனம் (PepsiCo Inc) Facebook சமூகத் தளத்தில் விளம்பரம் செய்வதைத் தற்காலிகமாய் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அந்தத் தற்காலிக நிறுத்தம், ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்று Fox Business செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Facebook இல் வெளியிடப்படும் வெறுப்பைத் தூண்டும் கருத்துகளைத் தடுத்து நிறுத்த, அந்த நிறுவனம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பல தரப்பினரும் குறை கூறி வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து Ben & Jerry's, Unilever உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள், Facebookஇல் விளம்பரம் செய்வதை அண்மையில் நிறுத்தின.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்