Images
  • peru covid
    (படம்: AFP / Diego RAMOS)

பெருவில் 400,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி

தென்னமெரிக்க நாடான பெருவில் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 400,000ஐக் கடந்துள்ளது.

அந்நாட்டுச் சுகாதார அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.

நோய்த்தொற்றால் அங்கு சுமார் 19,000 பேர் மாண்டனர்.

லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக ஆக அதிக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள இடம் பெரு.

அங்கு நேற்று ஒரே நாளில் 204 பேர் மாண்டனர்; 5,678 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

இருப்பினும் இந்த மாதத் தொடக்கத்திலிருந்து பெரு அதன் முடக்கநிலையைத் தளர்த்திவருகிறது.
 

Top