Images
  • Plastic ban

மூன்றாண்டுகளுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் சட்டம் இயற்றிய பெரு நாடாளுமன்றம்

தென்னமெரிக்க நாடான பெரு நாடாளுமன்றம், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கிவீசும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை மூன்று ஆண்டுகளுக்குள் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேருவதைத் தடுப்பதற்கு அந்தச் சட்டம் உதவும்.

அதன்படி, பெருவிலுள்ள நிறுவனங்கள் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், உறிஞ்சுகுழல்கள், பெட்டிகள் ஆகியவற்றைத் தயாரிப்பதை நிறுத்தவேண்டும்.

பெருவிலுள்ள வர்த்தக நிறுவனங்கள், இனி மறுபயனீட்டுக்கு உகந்த பைகளையோ, மக்கிப்போகும் தன்மையுள்ள பொருட்களையோ பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் முதன் முறையாக, சிலி நாடு சென்ற ஆகஸ்ட் மாதம் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து பெருவும் அத்தகைய சட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

Top