Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

AstraZeneca அல்லது Pfizer தடுப்பூசிகளை இரு முறை போடுவதால் டெல்ட்டா வகைக் கிருமியிலிருந்தும் பாதுகாப்புப் பெறலாம்

AstraZeneca அல்லது Pfizer நிறுவனங்களின் COVID-19 தடுப்பூசிகளை இரு முறை போடுவதால், டெல்ட்டா வகைக் கிருமியிலிருந்தும் போதிய அளவு பாதுகாப்புப் பெறலாம் என ஆய்வொன்று கூறுகிறது.

வாசிப்புநேரம் -

AstraZeneca அல்லது Pfizer நிறுவனங்களின் COVID-19 தடுப்பூசிகளை இரு முறை போடுவதால், டெல்ட்டா வகைக் கிருமியிலிருந்தும் போதிய அளவு பாதுகாப்புப் பெறலாம் என ஆய்வொன்று கூறுகிறது.

ஆய்வின் முடிவுகள், நியூ இங்கிலாந்து மருத்துவச் சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

முன்பு அதிகமாகப் பரவி வந்த ஆல்ஃபா வகைக் கிருமிக்கு எதிராகத் தடுப்புமருந்துகளுக்கு எவ்வளவு செயல்திறன் இருந்ததோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு அவை டெல்ட்டா கிருமிக்கு எதிராகவும் செயல்படும் என்று கூறப்பட்டது.

தடுப்புமருந்துகளின் செயல்திறன்
(இரு முறை போட்ட பிறகு)

ஆல்ஃபா வகைக் கிருமி
Pfizer - 93.7
AstraZeneca - 74.5

டெல்ட்டா வகைக் கிருமி
Pfizer - 88
AstraZeneca - 67

ஒரு முறை தடுப்பூசி போட்டால்
Pfizer - 36
AstraZeneca - 30 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்