Images
  • pfizer
    படம்: AFP

பிள்ளைகளிடம் Pfizer-BioNTech தடுப்புமருந்தைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஆணையம் அனுமதி

ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஆணையம் Pfizer-BioNTech தடுப்புமருந்தை 5 முதல் 11 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளிடம் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் நோய்ப்பரவலுக்கு இடையே அந்த ஒப்புதல் வழங்கப்படுகிறது.

ஜெர்மனி, நெதர்லந்து போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் பிள்ளைகள் என்று தெரிவிக்கப்பட்டது.

பிள்ளைகளுக்குக் குறைவான அளவில் தடுப்புமருந்தைக் கொடுக்கும்படியும், ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இடையே கூடுதல் இடைவெளி இருக்கும்படியும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பிள்ளைகளுக்கான் தடுப்புமருந்து, அடுத்த மாத இறுதிக்குள் தயாராகி, விநியோகம் செய்யப்படும் என்று Pfizer நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள், பிள்ளைகளுக்கான தடுப்புமருந்துகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளன.

Top