Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Pfizer தடுப்பு மருந்து புதுவகை COVID-19 கிருமிக்கு எதிராக எப்படி வேலை செய்கிறது - 2 வாரத்தில் தரவுகளைத் திரட்டத் திட்டம்

Pfizer தடுப்பு மருந்து புதுவகை COVID-19 கிருமிக்கு எதிராக எப்படி வேலை செய்கிறது - 2 வாரத்தில் தரவுகளைத் திரட்டத் திட்டம்

வாசிப்புநேரம் -

புதுவகை COVID-19 கிருமிக்கு எதிராகத் தனது தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த தரவுகளை 2 வாரத்தில் திரட்ட Pfizer-BioNTech நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் ஆய்வுக்கூடங்களில் ஆராய்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அதன்மூலம் தரவுகள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவனத்தின் பேச்சாள்ர் தெரிவித்தார்.

தரவுகள் கிடைப்பதன்மூலம் தடுப்பு மருந்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்பது தெரியவரும் என்றார் அவர்.

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதுவகை COVID-19 கிருமி வகைக்கு ஓமிக்ரான் (Omicron) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய கிருமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்து அதிகம் கொண்ட டெல்ட்டா வகை COVID-19 கிருமியைவிட ஓமிக்ரான் மோசமானதாக இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

-AFP/ad 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்