Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: COVID-19 தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அவசர அனுமதிக்கு விண்ணப்பித்துள்ள Pfizer

அமெரிக்காவில், COVID-19 நோய்க்கு எதிரான தடுப்புமருந்தை  பயன்படுத்துவதற்கான அவசர அனுமதியைப் பெறுவதற்கு Pfizer மருந்தாக்க நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில், COVID-19 நோய்க்கு எதிரான தடுப்புமருந்தை பயன்படுத்துவதற்கான அவசர அனுமதியைப் பெறுவதற்கு Pfizer மருந்தாக்க நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

அந்தத் தடுப்புமருந்தை ஜெர்மனியின் BioNTech நிறுவனத்துடன் இணைந்து Pfizer உருவாக்கியுள்ளது.

248 நாள்களில், தடுப்புமருந்து தயாரிக்கப்பட்டதாக Pfizer நிறுவனத்தின் தலைவர் ஆல்பெர்ட் போர்லா (Albert Bourla) தெரிவித்தார்.

மருத்துவச் சோதனைகளில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதையும் அவர் வலியுறுத்தினார்.

Pfizer நிறுவனத்தின் தடுப்பு மருந்து 95 விழுக்காடு வெற்றிகரமாய்ச் செயல்படுவதாக இறுதிக்கட்ட சோதனை முடிவுகள் காட்டுகின்றன.

முடிவுகளை ஆராய்வதற்கு எவ்வளவு நாள் பிடிக்கும் என்பது பற்றி அமெரிக்க உணவு, மருந்து ஆணையம் விவரமளிக்கவில்லை.

எனினும், அடுத்த மாத நடுப்பகுதிக்குள் தடுப்புமருந்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதத்தில், 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்குத் தடுப்புமருந்தைச் செலுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்