Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Pfizer, Moderna தடுப்பூசிகள் - ஒருமுறை போட்டால் நோய் ஏற்படுவதை 80% தடுக்கமுடியும்: அமெரிக்கா

Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசியை ஒருமுறை போட்டால், COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதை 80 விழுக்காடு தடுக்க முடியும் என்று அமெரிக்கத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
Pfizer, Moderna தடுப்பூசிகள் - ஒருமுறை போட்டால் நோய் ஏற்படுவதை 80% தடுக்கமுடியும்: அமெரிக்கா

(கோப்புப் படம்: REUTERS/Thomas Peter)

Pfizer, Moderna ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசியை ஒருமுறை போட்டால், COVID-19 நோய்த்தொற்று ஏற்படுவதை 80 விழுக்காடு தடுக்க முடியும் என்று அமெரிக்கத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 4,000 மருத்துவத்துறை, முன்னிலை ஊழியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவலின் மூலம் அது தெரியவந்துள்ளது.

தடுப்பூசிகளின் செயல்திறன், முதல் முறை போட்ட, இரண்டு வாரங்களுக்குப் பிறகு தென்பட்டதாக நிலையம் தெரிவித்தது.

இரண்டாவது முறை தடுப்பூசி போடப்பட்டதும் அதன் செயல்திறன் 90 விழுக்காடு வரை உயர்ந்ததாகக் கூறப்பட்டது.

புதிய கண்டுப்பிடிப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்காவில் முதல் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை வழங்கபடவேண்டும் என்ற கருத்துகள் வெளியாகியுள்ளன.

ஆனால், வெள்ளை மாளிகையின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆன்ட்டனி ஃபௌச்சி (Anthony Fauci), கடந்த சில மாதங்களாக, இரு முறை தடுப்பூசி போடும் செயல்பாட்டைத் தொடருமாறு வலியுறுத்திவருகிறார்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்