Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு Pfizer தடுப்புமருந்துச் சோதனை

Pfizer அதன் COVID-19 தடுப்புமருந்தை 12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளிடம் சோதிக்கவிருக்கிறது. 

வாசிப்புநேரம் -

Pfizer அதன் COVID-19 தடுப்புமருந்தை 12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளிடம் சோதிக்கவிருக்கிறது.

சோதனையின் ஆரம்பக் கட்டத்திற்குக் குறைந்த அளவு மருந்து தேர்ந்தெடுக்கப்படடது.

4,500 குழந்தைகள் ஆய்வில் பங்குபெறுவர்.

அமெரிக்கா, ஃபின்லந்து, போலந்து, ஸ்பெயின் ஆகியவற்றின் 90-க்கும் மேற்பட்ட மருத்துவத்தளங்களில் ஆய்வு நடத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

144 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஆய்வு மூலம், 5 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 10 மைக்ரோகிராம் அளவு தடுப்புமருந்து சோதிக்கப்படும் என்று Pfizer கூறியது.

செப்டம்பர் மாதத்தில் அதன் தகவல்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 3 மைக்ரோகிராம் அளவு சோதிக்கப்படும்.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அதற்கான தரவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-REUTERS  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்