Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

BioNTech-Pfizer தடுப்பூசிகள் 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் மீது 100% செயல்திறன் கொண்டுள்ளதாக அறிவிப்பு

BioNTech-Pfizer தடுப்பூசிகள் 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் மீது 100% செயல்திறன் கொண்டுள்ளதாக அறிவிப்பு

வாசிப்புநேரம் -
BioNTech-Pfizer தடுப்பூசிகள் 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் மீது 100% செயல்திறன் கொண்டுள்ளதாக அறிவிப்பு

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

BioNTech-Pfizer தடுப்பூசிகள், 12 முதல் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் மீது 100 விழுக்காடு செயல்திறன் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு பள்ளிகள் தொடங்குவதற்கு முன்னர் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் பெறத் திட்டமிடுவதாக BioNTech-Pfizer நிறுவனங்கள் கூறின.

அமெரிக்காவில் அந்நிறுவனங்களின் மூன்றாம் கட்டச் சோதனைகள் முடிந்துள்ளன. அதில் 2,260 பேர்
கலந்துகொண்டனர்.

சோதனையில் கலந்துகொண்ட அனைவரிடத்திலும் தடுப்பூசி 100 விழுக்காடு செயல்பட்டு, அவர்களுக்கு நோய் எதிர்ப்பையும் தந்துள்ளது.

வரும் நாள்களில் சோதனையின் தரவுகளை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்துத் தடுப்பூசியை அவசரகாலத்தில் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக Pfizer நிறுவனம் தெரிவித்தது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் BioNTech-Pfizer தடுப்பூசிகளை 16 வயதிற்கு மேற்பட்டோர் போட்டுக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

BioNTech-Pfizer தடுப்பூசிகளை 65 நாடுகள் பயன்படுத்துகின்றன.

- AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்