Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்பு மருந்தின் செயல்திறன் அடுத்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும்: Pfizer

Pfizer மருந்து நிறுவனம் தயாரித்துள்ள COVID-19 தடுப்பு மருந்தின் செயல்திறன் அடுத்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் எனத் தலைமை நிர்வாக அதிகாரி Albert Bourla கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்பு மருந்தின் செயல்திறன் அடுத்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும்: Pfizer

(கோப்புப் படம்: Reuters/Eric Gaillard)

Pfizer மருந்து நிறுவனம் தயாரித்துள்ள COVID-19 தடுப்பு மருந்தின் செயல்திறன் அடுத்த மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் எனத் தலைமை நிர்வாக அதிகாரி Albert Bourla கூறியுள்ளார்.

ஏற்கனவே நிறுவனம், பல்லாயிரக்கணக்கான முறை பயன்படுத்தத் தேவையான தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துவிட்டது; அவை விநியோகத்துக்குத் தயாராகவுள்ளன என்றார் அவர்.

இருப்பினும் தடுப்பு மருந்துக்கான ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது.

இறுதிக்கட்டச் சோதனைகளில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை, 30,000லிருந்து 44,000க்கு அதிகரிக்கவும் Pfizer திட்டமிடுகிறது.

ஜெர்மானிய மருந்து நிறுவனமான Bio-N-Techஉடன் இணைந்து Pfizer நிறுவனம், தடுப்பு மருந்துகளைத் தயாரிக்க இதுவரை ஒன்றரை பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

ஆகையால், தடுப்பு மருந்துகள் பயனில்லாமல் போனால், அந்தத் தொகையை இழப்பது மிகக் கடினமாக இருக்கும் என்று திரு. Bourla கூறினார்.

அரசியல் தலையீட்டை விலக்கும் நோக்கில், Pfizer நிறுவனம் அரசாங்க நிதியுதவிகளை மறுத்து வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்