Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிலிப்பீன்ஸ் 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணத் தடைவிதித்துள்ளது

பிலிப்பீன்ஸ் 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணத் தடைவிதித்துள்ளது

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் புதிய எல்லைக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

7 ஆப்பிரிக்க நாடுகளின் பயணிகள் அங்கு செல்லத் விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, நெதர்லந்து, சுவிட்சர்லந்து, பெல்ஜியம், இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோர், அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை பிலிப்பீன்ஸுக்குச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் பிலிப்பீன்ஸ் செல்ல அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அந்தத் திட்டம் மீட்டுக்கொள்ளப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் ஓராண்டில் முதன்முறை, பிலிப்பீன்ஸில் புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை, நேற்று 838ஆகப் பதிவானது.

கடந்த செப்டம்பரில் ஒரே நாளில் அங்கு 26,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

கூடுதலாக 20 மில்லியன் முறை போடத் தேவையான Pfizer-BioNTech தடுப்புமருந்துகளை வாங்கவும் பிலிப்பீன்ஸ் திட்டமிடுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்