Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்பூசி தொடர்பாக ரஷ்யா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பிலிப்பீன்ஸ் பாராட்டு

COVID-19 தடுப்பூசி தொடர்பாக ரஷ்யா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பிலிப்பீன்ஸ் பாராட்டு

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்பூசி தொடர்பாக ரஷ்யா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பிலிப்பீன்ஸ் பாராட்டு

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo)

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே (Rodrigo Duterte) COVID-19 தடுப்பூசி தொடர்பாக ரஷ்யா எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

தடுப்பூசி தொடர்பான சோதனைகளில் பங்கேற்க அவர் ஆர்வம் தெரிவித்தார்.

பிலிப்பீன்ஸுக்கு COVID-19 தடுப்பூசிகளை மாஸ்கோ விநியோகம் செய்யமுன்வந்துள்ளதை அவர் வரவேற்றார்.

அவை, இலவசமாக வழங்கப்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாகத் திரு. டுட்டார்டே கூறினார்.

உத்தேச COVID-19 தடுப்பூசிக்கான ஒப்புதலை, மருத்துவ வழிகாட்டு ஆணையம் இம்மாதம் வழங்குமென ரஷ்யா எதிர்பார்க்கிறது.

அவற்றை பிலிப்பீன்ஸுக்கு வழங்கவோ உள்ளூர் நிறுவனத்தோடு இணைந்து பெரிய அளவில் உற்பத்தி செய்யவோ, ரஷ்யா தயாராக உள்ளது.

கிருமிப்பரவலை எதிர்த்துப் போராட ரஷ்யா நடத்திவரும் ஆய்வுகளில் தமக்கு அதிக நம்பிக்கை உண்டு எனத் திரு டுட்டார்டே குறிப்பிட்டார்.

ரஷ்யா உருவாக்கிவரும் தடுப்பூசி, மனித குலத்துக்கே நன்மை பயக்கும் என்றார் அவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்