Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கைதுசெய்யப்பட்ட பின்னர் கைத்தொலைபேசி வைத்திருந்த ஆடவருக்கு 12 ஆண்டுச் சிறை

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில், கைதுசெய்யப்பட்ட பின்னரும் கைத்தொலைபேசியை வைத்திருந்ததால் ஆடவர் ஒருவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கைதுசெய்யப்பட்ட பின்னர் கைத்தொலைபேசி வைத்திருந்த ஆடவருக்கு 12 ஆண்டுச் சிறை

(படம்: AP)

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில், கைதுசெய்யப்பட்ட பின்னரும் கைத்தொலைபேசியை வைத்திருந்ததால் ஆடவர் ஒருவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடவரின் தண்டனை இனப் பாகுபாட்டின் அடிப்படையில் விதிக்கப்பட்டதாக நீதிபதிகளின்மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதுக் கருப்பின ஆடவரான வில்லி நேஷ் (Willie Nash), முறைகேடான நடவடிக்கைக்காகக் கைதுசெய்யப்பட்டார்.

தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது காவல் அதிகாரியிடம் தனது தொலைபேசியை மின்னூட்டம் செய்ய உதவி கேட்டிருக்கிறார். ஆடவர் கைத்தொலைபேசி வைத்திருந்ததை அப்போது அறிந்தனர் காவல் அதிகாரிகள்.

தடுப்புக் காவலில் இருந்த வேளையில் ஆடவர் தம் மனைவிக்குக் குறுந்தகவல்கள் அனுப்பியதையும் அவர்கள் அறிந்தனர்.

ஆடவர் கைதுசெய்யப்பட்டபோது முறையாகச் சோதிக்கப்பட்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை என்ற அடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவாதிக்கப்பட்டுள்ளது.

நேஷ் தமது தண்டனையைக் குறைக்கும்படி மேல்முறையீடு செய்தும் நீதிபதிகள் குழு அதை மறுத்துள்ளது.

ஆடவர் கைத்தொலைபேசியை மறைக்க முயலவில்லை என்றும் அதனால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்