Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 சூழல் உலகெங்கும் பரவியுள்ளது. உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ? உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

படம்: AFP / Alexis Múnera

COVID-19 சூழல் உலகெங்கும் பரவியுள்ளது. உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ?

உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....

கொலம்பியா

படம்: AFP / Alexis Múnera

படம்: AFP / Alexis Múnera
மேற்குக் கொலம்பியாவிலுள்ள உக்குமாரி உயிரியல் பூங்காவின் (Ukumari Biopark), விலங்குத் தோட்டம்.

சுற்றுப்பயணிகள் இல்லாத தோட்டத்தில், ஃபிலமிங்கோ பறவைகள் இருக்கும் இடத்தை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்கிறார்.


மெக்சிக்கோ

படம்: AFP / Pedro PARDO

படம்: AFP / Pedro PARDO
மெக்சிக்கோ நகரின் கேளிக்கைப் பூங்கா ஒன்றின் ஊழியர்கள் நோய்ப்பரவலினால் வேலையையும் ஊதியத்தையும் இழந்துள்ளனர்.

அவர்கள் வாடிய முகங்களுடன் கேளிக்கைப் பூங்காவைச் சுற்றி நடப்பதைக் காண முடிகிறது.


பாகிஸ்தான்

படம்: AFP / Asif HASSAN

படம்: AFP / Asif HASSAN
கராச்சி நகரிலுள்ள கடைத்தொகுதி ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் திரண்டுள்ளனர்.

நோய்த்தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளதால் பாகிஸ்தானில் முடக்க நிலையை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.


ரஷ்யா

படம்: AFP / Yuri KADOBNOV

படம்: AFP / Yuri KADOBNOV
மாஸ்கோ நகரின் அருகே உள்ள செக்கொவ் நகரின் நீர்ச்சுவர்.... அங்கு, முகக்கவசம் அணிந்த பெண் ஒருவர் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு நீரில் விளையாட விடுகிறார்.


சில்லி

படம்: AFP / Claudio REYES

படம்: AFP / Claudio REYES
சேண்டியாகோவிலுள்ள இடுகாட்டில் பணிபுரியும் ஒருவர் மண்ணைத் தோண்டுகிறார்.

நோய்த்தொற்றினால் பலரும் மாண்டனர். அதனால், இடுகாடுகளில் வேலை செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்