Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புக்கெட் தீவு விடுதி அறைகளுக்கான கட்டணம் சரிவு... என்ன காரணம் ?

தாய்லந்தின் புக்கெட் தீவு விடுதி அறைகளுக்கான கட்டணம் சரிந்துள்ளது. கடற்கரைகளிலும் தங்கும் விடுதிகளிலும் மக்கள் கூட்டம் குறைந்தள்ளது.

வாசிப்புநேரம் -

தாய்லந்தின் புக்கெட் தீவு விடுதி அறைகளுக்கான கட்டணம் சரிந்துள்ளது. கடற்கரைகளிலும் தங்கும் விடுதிகளிலும் மக்கள் கூட்டம் குறைந்தள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் காரணமாக, சீனப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது அதற்கு முக்கியக் காரணம்.

தாய்லந்தின் பாட் (Bhat) நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தாய்லந்தில், பேங்காக் நகருக்குப் பிறகு, ஆக அதிகமான சுற்றுப்பயணிகள் செல்லும் இடம் புக்கெட் தீவு.

பொதுவாக அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, தாய்லந்துப் பயணத் துறையின் நிலையை மதிப்பிடுவதுண்டு.

தாய்லந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுப்பயணத் துறையின் பங்களிப்பு 18 விழுக்காடு. மொத்தப் பயணிகளில் சுமார் 25 விழுக்காட்டினர் சீனாவிலிருந்து செல்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்