Images
  • india (1)
    படம்: AFP

உலகமெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 கிருமித்தொற்று உலகின் அனைத்து மூலைகளுக்கும் பரவியுள்ளது.

அங்கு வாழும் மக்களின் சூழ்நிலைகள்....படங்களின் வடிவில்....

1. இடம்: லிப்ரவில், கபோன் (படம்: AFP/PORCIUNCULA)


மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள லிப்ரவில்லில் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கொண்டு COVID-19 கிருமித்தொற்று உள்ளவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்கின்றனர்.

2. இடம்: நியூ மெக்சிக்கோ, அமெரிக்கா (படம்: AFP/Mark RALSTON)


அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாநிலத்தில்
தொண்டூழியர்கள் அத்தியாவசியப் பொருள்களையும் உணவுப் பொருள்களையும் வசதி குறைந்தவர்களுக்குக் கொடுக்கப் பொருள்களைச் சேகரித்து வருகின்றனர்.

3. இடம்: அலகாபாத், இந்தியா (படம்: AFP/SANJAY KANOJIA)


இந்தியாவின் அலகாபாத் நகரில் வெளிமாநில ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப, பேருந்துச் சேவைகளுக்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

4. இடம்: லாஸ் வேகாஸ், அமெரிக்கா (படம்: Ethan Miller/AFP)


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள Valley உயர்நிலைப் பள்ளியில் COVID-19 நோயால் மாண்டவர்களுக்கு "We miss you" என்ற சொற்றொடரை மாணவர்கள் கடிதத்தில் எழுதித் திடலில் உள்ள வேலியில் ஒட்டிவைத்தனர்.

5. இடம்: மெக்சிக்கோ (படம்: ULISES RUIZ/ AFP)


மெக்சிக்கோவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஓரளவு குறைந்துவரும் நேரத்தில், அந்நாட்டு வீதிகளில் தற்போது சில சமய நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

6. இடம்: புளோரிடா, அமெரிக்கா ( படம்: AFP/Mike Ehrmann)


அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கட்டங்கட்டமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது அங்குக் கடற்கரைகளுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் மக்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர்.  

Top