Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

COVID-19 கொள்ளைநோய் உலகின் அனைத்து மூலைகளுக்கும் பரவியுள்ளது. அங்கு வாழும் மக்களின் சூழ்நிலை...படங்களில்...

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP / FRANCOIS GUILLOT)

COVID-19 கொள்ளைநோய் உலகின் அனைத்து மூலைகளுக்கும் பரவியுள்ளது.

அங்கு வாழும் மக்களின் சூழ்நிலை...படங்களில்...

(படம்: AFP / FRANCOIS GUILLOT)

2) AFP / PATRICIA DE MELO MOREIRA

போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் கோடைக் காலத்தை அனுபவிக்க கடற்கரைக்குத் திரண்டுள்ள மக்கள் கூட்டம்.

3) AFP / NARINDER NANU

நாடளாவிய முடக்கத்தின் காரணமாக இந்தியாவிலிருந்து வெளியேற முடியாமல் தவித்துவந்த பாகிஸ்தானியர்கள் வீடு திரும்புகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் வாகா எல்லைப் பகுதியில் அவர்கள் பிரியாவிடை கூறுகின்றனர்.

4) AFP / Luca Sola

தென்னாப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்க்கில் அன்றாட உணவு விநியோகத்திற்குச் சமைக்கும் தொண்டூழியர்கள். COVID-19 கொள்ளைநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆக ஏழ்மையானவர்களுக்கு அன்றாட உணவும் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஆனாலும், உதவி குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக வெளிநாட்டு ஊழியர்கள் குறைகூறிவருகின்றனர்.

5) AFP / STR

சீனாவின் பெய்ச்சிங்கில் உள்ள Forbidden City சதுக்கத்தில் திரண்டுள்ள மக்கள். கட்டுப்பாடுகள் மெல்ல மெல்லத் தளர்த்தப்படும் வேளையில் மக்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

6)AFP / Daniel MIHAILESCU

இரண்டு மாத முடக்கநிலையின் காரணமாக தவறவிடப்பட்ட ஈஸ்ட்டர் கொண்டாட்டத்தை மறுமுறை கொண்டாடுகின்றனர் ருமானிய மக்கள்.

7) AFP / Sergei GAPON

பெலரூஸின், மின்ஸ்க் நகருக்கு அருகே தொண்டூழியர்கள் சிலர் மருத்துவப் பாதுகாப்பு ஆடைகளையும், முகக் கவசங்களையும், சிறு கிராமத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்