Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

108.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட பிக்காசோ ஓவியங்கள்!

புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) 11 ஓவியங்கள் ஏலத்தில் 108.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டன. 

வாசிப்புநேரம் -

புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் பாப்லோ பிக்காசோவின் (Pablo Picasso) 11 ஓவியங்கள் ஏலத்தில் 108.9 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டன.

நேற்று (24 அக்டோபர்), அமெரிக்காவின், லாஸ் வேகஸில் (Las Vegas) இடம்பெற்ற Sotheby's ஏலத்தில் அவை விற்கப்பட்டன. மறைந்த ஸ்பானிய ஓவியக் கலைஞரான பிக்காசோவின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அந்த ஏல நிகழ்ச்சி இடம்பெற்றது.

சிவப்பு-ஆரஞ்சு நிறத் தொப்பி அணிந்த பெண் - என்ற அவரது ஓவியத் தொகுப்பு, அவருடன் உறவு வைத்திருந்த மரீ-தெரீஸ் வால்ட்டர் (Marie-Therese Walter) என்ற பெண்ணைச் சித்திரிக்கும் ஓவியங்களைக் கொண்டது.

ஓவியங்களில் ஒன்று Sotheby's ஏலத்தில் எதிர்பார்த்ததைப் போன்று சுமார் இரு மடங்கு விலையில், 40.5 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.

பிக்காசோவினுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உருவாக்கப்பட்ட மேலும் சில ஓவியங்களும் மில்லியன் கணக்கான டாலருக்கு விற்கப்பட்டன.

- AFP
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்