Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படமும் கதையும்

COVID-19 நோய் உலகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படமும் கதையும்

(படம்: AFP / Sergio LIMA)

COVID-19 நோய் உலகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

இப்படி ஒரு நிலை, உலகில் வரும் என்று யாராவது பிப்ரவரி மாதத்தில் சொல்லியிருந்தால்கூட அதை யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

கொரோனா கிருமித்தொற்றால், உலக மக்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலையைப் பிரதிபலிக்கும் சில படங்கள் இங்கே...


கோஸ்டா ரிக்கா

(படம்: AFP / Ezequiel BECERRA)

Basilica de los Angeles தேவாலயத்தில் பிராத்தனைக்காகச் சிலர் கூடியுள்ளனர். COVID-19 நோய் தொடர்பான மூன்றாம் கட்ட நடவடிக்கைகள், சென்ற ஞாயிற்றுக்கிழமை கோஸ்டா ரிக்காவில் தொடங்கின. அதன் ஒரு பகுதியாக, அதிகபட்சமாக 75 பேர் வரை தேவாலயத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், முகக் கவசம் அணிவது கட்டாயம். ஒவ்வொரு நபருக்கும் இடையே 1.8 மீட்டர் இடைவெளியும் கட்டாயம்.


பாகிஸ்தான்

(படம்: AFP / Arif ALI)

வரலாற்றுச் சிறப்புமிக்க லாகூர் டில்லி நுழைவாயிலைக் காவல் காக்கும் காவல்துறை அதிகாரிகள். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேல்

படம்: REUTERS/ AFP

(படம்: AFP / MENAHEM KAHANA)

ஜெருசலத்தின் மஹானே யெஹுடா (Mahane Yehuda) சந்தையில் முகக்கவசம் அணிந்து பொருள்கள் வாங்கும் மக்கள்.


பிரேசில்

(படம்: AFP / Sergio LIMA)

COVID-19 நோய்த்தொற்றால் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சிலுவைக்கு அருகே பூக்களை வைக்கிறார்.

அதிபர் போல்சோனாரோவை ( Bolsonaro) எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே 1,000 சிலுவைகள் வைக்கப்பட்டன.


பொலிவியா

(படம்: AFP / AIZAR RALDES)

பொலிவியப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் துணியால் வடிவமைக்கப்பட்ட முகக்கவசத்தை லா பாஸ் (La Paz) தெருவில் ஒருவர் விற்பனை செய்கிறார்.

கொரோனா கிருமித்தொற்றால் வேலை இல்லாதோரின் விகிதம் பொலிவியாவில் அதிகரித்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்