Images
  • russia (2)
    (படம்: AFP / Yuri KADOBNOV)

உலகெங்கும் COVID-19: படமும் கதையும்

COVID-19 நோய்த்தொற்று உலகெங்கும் பரவியுள்ளது.

மக்களின் சூழ்நிலை...படங்களில்...

ஈராக்


(படம்: AFP / SAFIN HAMED)
வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான ஷக்லாவாவில் (Shaqlawah) உள்ள ஒரு பாரம்பரிய காபிக் கடையில் இருவர் அமர்ந்துள்ளனர்.

ஈராக்கின் குர்தியப் பகுதியான அது, அண்மையில் கிருமிப்பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டது. அங்கு 200 சுகாதார ஊழியர்கள் உட்பட சுமார் 5,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


ரஷ்யா


(படம்: Yuri KADOBNOV)
மாஸ்கோவின் ஸர்யட்யே பூங்காவைக் (Zaryadye Park) காவல்துறை அதிகாரி ஒருவர் காவல் காக்கிறார்.


கிரீஸ்


(படம்: AFP / Louisa GOULIAMAKI)
அக்ரோபோலிசைப் (Acropolis) பார்த்தபடி இருவர் Filopappou மலையில் நடக்கின்றனர்.

கிரீஸுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜூலை முதல் தேதியிலிருந்து பயணம் மேற்கொள்வதற்கு 48 மணி நேரத்துக்கு முன் இணையத்தில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அந்தப் பதில்கள் அவர்களுக்கு COVID-19 சோதனை தேவையா என்று முடிவெடுக்க உதவும்.


ஹோண்டுராஸ்


(படம்: AFP / ORLANDO SIERRA)
ஆடவர் ஒருவர் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தலைநகர் டெகுசிகல்ப்பாவின் (Tegucigalpa)மருத்துவமனை ஒன்றின் வெளியே நின்று பிரார்த்தனை செய்கிறார்.


மெக்சிகோ


(படம்: AFP / ALFREDO ESTRELLA)
மெக்சிகோ நகரில் மக்கள் வங்கிக்குச் செல்வதற்காக வரிசையில் நிற்கின்றனர்.

இந்த வாரம் முதல் மெக்சிகோ நகரில் கடைகள், சந்தைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் திறக்கப்படுகின்றன. 

Top