Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

படங்கள் சொல்லும் கதைகள்...

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP / Filippo MONTEFORTE)

இந்தியா

(கோப்புப் படம்: AFP / NOAH SEELAM)

(AFP / NOAH SEELAM)

ஹைதராபாத் நகரின் COVID-19 நோய்த்தொற்றுச் சோதனை நிலையத்தில், மக்கள் சோதனைக்கு முன் சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்கள்.

ஆக அதிகக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா திங்கட்கிழமை அன்று (ஜூலை 6) மூன்றாவது நிலையை எட்டியது.


கொலம்பியா

(படம்: AFP / JOAQUIN SARMIENTO)

(AFP / JOAQUIN SARMIENTO)

சபானெட்டா நகராட்சியில் மக்கள் தங்கள் வாகனங்களில் அமர்ந்தவாறு திறந்த வெளித் திரையரங்கில் படம் பார்க்கின்றனர்.


கியூபா

(படம்: AFP / YAMIL LAGE)

(AFP / YAMIL LAGE)

அர்டெமிசா மாநிலத்தில் முகக்கவசம் அணிந்த ஒருவர் குதிரை வண்டியில் சவாரி செய்கிறார்.

கியூபாவில் சுமார் 2,400 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

86 பேர் மாண்டனர்.


செர்பியா

(படம்: AFP / Andrej ISAKOVIC)

(AFP / Andrej ISAKOVIC)

ஆர்ப்பாட்டக்காரர்கள் பெல்கிரேடின் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியே COVID-19 தொடர்பான வார இறுதி ஊரடங்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

நாடாளுமன்றத்திற்குள் வல்லந்தமாக நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் வெடித்தது.

அதிபர் அலெக்சாண்டர் வுசிச்(Aleksandar Vucic) பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.


இத்தாலி

(படம்: AFP / Filippo MONTEFORTE)

(AFP / Filippo MONTEFORTE)

தெற்கு இத்தாலியின் அமல்ஃபி கரையோர வீதியில் மக்கள் நடந்துசெல்கின்றனர்.

அமெரிக்கச் சுற்றுப்பயணிகளின் வருகை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்ததால், அமல்ஃபி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்