Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

கொரோனா கிருமிப்பரவல்....உலகை இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆட்டிப்படைத்து வருகிறது.

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

(படம்: AFP / Tiziana FABI)

கொரோனா கிருமிப்பரவல்....உலகை இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஆட்டிப்படைத்து வருகிறது.

மீண்டும் மீண்டும் முடங்கித் திண்டாடுகின்றன உலக நாடுகள்...இப்போது உலக நாடுகளில் நிலைமை என்ன?

இந்தப் படங்களே சாட்சி.

வட கொரியா

(படம்: AFP / KIM Won Jin)

(படம்: AFP / KIM Won Jin)

கங்வோன் மாவட்டத்தில், சுகாதார அதிகாரி பேருந்தில் பயணம் செய்பவரின் உடல் வெப்பநிலையைச் சோதிக்கிறார்.

பிரான்ஸ்

(கோப்புப் படம்: AFP / Philippe LOPEZ)

(படம்: AFP / Philippe LOPEZ)

போர்டியாக்ஸ் (Bordeaux) நகரின் Grand Theatre முன்னால் மிதிவண்டியில் செல்கிறார்
உணவு விநியோகிப்பாளர்.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நள்ளிரவிலிருந்து, பிரான்ஸில் தேசிய அளவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

எல் சல்வடோர் (El Salvador)

(படம்: AFP / Yuri CORTEZ)

(படம்: AFP / Yuri CORTEZ)

பன்சிமல்கோ (Panchimalco) ஊரில் உள்ள Casa de la Cultura இடத்தில், ஒரு பெண்மணி நூற்புக் கருவி மூலம் பாரம்பரியத் துணியை நெய்கிறார்.

அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள், பனோ பன்சோ (pano pancho) எனும் பாரம்பரியத் துணியில் முகக்கவசம் உட்படப் பல உடைகளை நெய்கின்றனர்.

இத்தாலி

(படம்: AFP / Tiziana FABI)

(படம்: AFP / Tiziana FABI)

தீவிர சிகிச்சைப் பிரிவில், தனிநபர் பாதுகாப்புக் கவச ஆடைகளை அணிய ஒரு தாதிக்கு, சக ஊழியர் உதவுகிறார்.

இத்தாலியில் முன்னெப்போதும் இல்லாத அளவு கிருமிப்பரவல் அதிகமாவதால், தேசிய அளவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

தாய்லந்து

(படம்: AFP / Lillian SUWANRUMPHA)

(படம்: AFP / Lillian SUWANRUMPHA)

தாய்லந்து - மியன்மார் எல்லையில் இரண்டாம் நட்புப் பாலத்திற்கு அருகே உள்ள போக்குவரத்து அமைச்சில், உடல் வெப்பநிலையைச் சோதிக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்