Images
  • aus
    படம்: AFP / William WEST

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

கொரோனா கிருமிப் பரவலின் தீவிரம் இன்னும் தணிந்தபாடில்லை.

உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ?

உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....


ரஷ்யா


படம்: AFP / Natalia KOLESNIKOVA
மாஸ்கோவின் மத்திய வட்டாரச் சைக்கிள் நிறுத்துமிடத்தில், முகக்கவசம் அணிந்த உணவு விநியோக ஊழியர் அவரது சைக்கிளை நிறுத்தி வைக்கிறார்.


பிரிட்டன்


படம்: AFP / JUSTIN TALLIS
லண்டனின் மத்திய பகுதியிலுள்ளது Primrose Hill. கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வருமுன்னர் கோடைக்கால வெயிலை ரசித்தவண்ணம் நேற்று சிலர் அங்கு கூடினர்.

கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததால், பிரிட்டிஷ் அரசாங்கம் இன்று முதல் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது.


இந்தியா


படம்: AFP / Sajjad HUSSAIN
உத்தரப் பிரதேசத்திலுள்ள நொய்டா நகரின் மேம்பாலச் சாலையில் அழகிய சுவரோவியங்கள் உள்ளன.

அவற்றில் முகக்கவசம் அணிந்தவர்கள் சித்திரிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் அவற்றைக் கடந்து செல்கிறார்,


மியன்மார்


படம்: AFP / Ye Aung THU
யங்கூனில் ஊழியர்கள் சிலர் காற்பந்துத் திடல் ஒன்றில் தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைக்கின்றனர்.

கிருமி தொற்றியவர்களுக்காக அத்தகைய கூடாரம் அமைக்கப்படுகிறது.


ஆஸ்திரேலியா


படம்: AFP / William WEST
மெல்பர்னின் குவீன் விக்டோரியா சந்தையில் முடக்கநிலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நிகழ்கிறது.

குதிரை ஏறி அங்கு பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரரைச் சுற்றிவளைத்தனர்; ஆடவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Top