Images
  • Britain
    கோப்புப்படம்: AFP / Oli SCARFF

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

கொரோனா கிருமியின் கொடுமை இன்னும் தணிந்தபாடில்லை.

உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை ?

உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....


போர்ச்சுகல்


படம்: AFP / PATRICIA DE MELO MOREIRA
கெஸ்காய்ஸ் (Cascais) நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பேருந்து ஒன்று மருத்துவப் பரிசோதனை நிலையமாகப் பயன்படுத்தப்படும் காட்சி.


க்யூபா


படம்: AFP / Yamil LAGE
ஹவானாவில் பெண் ஒருவர் கிருமித்தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முகத்தில் கைக்குட்டை ஒன்றைக் கட்டி வைத்திருக்கிறார்.


பிரிட்டன்


படம்: AFP / Oli SCARFF
மத்திய இங்கிலாந்தில் உள்ள கடைத்தொகுதியில் மக்கள் பலர் நடந்துசெல்கின்றனர்.

அவர்களில் சிலர் முகக்கவசம் அணிந்துள்ளனர். கடைத்தொகுதியின் நடுவே "பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றவேண்டும்" எனக் கூறும் அறிவிப்புப் பலகை பொருத்தப்பட்டுள்ளது.


பிரான்ஸ்


படம்: AFP / DENIS CHARLET
வட பிரான்ஸில் ஊழியர் ஒருவர் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறார். பிரான்ஸ் அரசாங்கம் பொதுப் போக்குவரத்தில் கூட்டத்தைக் குறைக்க, சைக்கிள் பழுதுபார்ப்புக்குச் சலுகைகள் வழங்குகிறது.


இஸ்ரேல்


படம்:AFP / MENAHEM KAHANA
ஜெருசலத்திலுள்ள சந்தை ஒன்றில் மக்கள் பலர் முகக்கவசம் அணிந்துள்ளனர். அங்கு முடக்கத்தால் மக்கள் சீற்றமடைந்துள்ளனர். இருப்பினும், பிரபல சந்தைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

Top