Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

கொரோனா கிருமியின் கொடுமை இன்னும் தணிந்தபாடில்லை. உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை? உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்….

வாசிப்புநேரம் -
உலகெங்கும் COVID-19: படங்கள் சொல்லும் கதைகள்

படம்: AFP / William WEST

கொரோனா கிருமியின் கொடுமை இன்னும் தணிந்தபாடில்லை.

உலக நாடுகளில் தற்போது என்ன நிலைமை?

உலகின் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட படங்கள்....


இந்தியா

கோப்புப்படம்: AFP / Prakash SINGH


புதுடில்லியில் மருத்துவப் பரிசோதனைக்காக மக்கள் முகக்கவசம் அணிந்து வரிசையில் காத்திருக்கின்றனர். 


ஆஸ்திரேலியா

படம்: AFP / William WEST


மெல்பர்ன் புறநகரில் உள்ள செயிண்ட் கில்டாவின் Luna Park வாசலில் முகக்கவசம் அணிந்தவர் நடந்துசெல்கிறார். மெல்பர்னில் தொடர்ந்து கடுமையான முடக்கம் நடப்பில் உள்ளது.


குவட்டமாலா

கோப்புப்படம்: AFP / Johan ORDONEZ


கிருமிப்பரவால் வருமானம் பாதிக்கப்பட்டவர் உணவு பெறுகிறார்.

கடந்த ஐந்து மாதங்களாக 100,000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களைக் கொடுத்த La Olla Comunitaria தனியார் உணவகம் இனி மக்களுக்கு உதவ இயலாது என்று தெரிவித்துள்ளது.


கோஸ்டா ரிக்கா

படம்: AFP / Ezequiel BECERRA


சான் ஹோசே நகரில் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படுகிறது. ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் "மக்கள் ஒற்றுமை" என்ற சொற்கள் கொண்ட முகக்கவசம் அணிந்துள்ளார்.


ஈராக்

படம்: AFP / Sabah ARAR


மத்திய ஈராக்கின் நஜஃப் நகர் சந்தையில் முகக்கவசம் அணிந்த பெண் துணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்