Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புறாக்களின் தொல்லை தாங்கமுடியாமல் அவற்றை வேறு இடத்துக்கு மாற்றும் ஸ்பானிய அதிகாரிகள்

ஸ்பெயினின் காடிஸ் (Cádiz) நகர அதிகாரிகள் மிகப் பெரிய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

ஸ்பெயினின் காடிஸ் (Cádiz) நகர அதிகாரிகள் மிகப் பெரிய பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் வெளிப்புற உணவங்காடிகளில் திரளும் சுமார் 5,000 புறாக்களை அங்கிருந்து அகற்றும் பணியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

உணவகங்களில் புறாக்களின் தொல்லையைத் தாங்க முடியாமல் சுற்றுப்பயணிகள் அவற்றில் அமர்ந்து உணவை ருசிக்கத் தயங்குகின்றனர்.

அதைத் தொடர்ந்து புறாக்களைப் பிடித்து கிழக்கு ஸ்பெயினின் கிராமப்புறங்களில் விடுவிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பறவைகளைச் சுட்டுக் கொல்வதற்குப் பதிலாக இந்தத் தீர்வை எடுக்க ஸ்பானிய அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இதன்மூலம் நகர்ப்புறங்களில் உள்ள புறாக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர்.





விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்