Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானியின் அறைக்குள் பயணி நுழைந்ததால் விமானியின் வேலைக்கு வேட்டு

பிரபலமான ஒருவரைக் கண்டால் சிலர் தன்னிலை மறந்துவிடுவதுண்டு. வேண்டாத வேலையைச் செய்வதும் உண்டு.

வாசிப்புநேரம் -

எகிப்து: பிரபலமான ஒருவரைக் கண்டால் சிலர் தன்னிலை மறந்துவிடுவதுண்டு. வேண்டாத வேலையைச் செய்வதும் உண்டு.

அப்படி ஒரு வேலையைச் செய்து வேலையைப் பறிகொடுத்திருக்கிறார் விமானி ஒருவர்.

முகமது ரமடான் என்ற ஆடவர் எகிப்தில் பிரபலமான பாடகர், நடிகர்.

அவரது Youtube பக்கத்தில் சுமார் 7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.

ரமடான் தமது குழுவுடன் சவுதி அரேபியத் தலைநகரான ரியாத்திற்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது, தமது சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதற்காக தம்மைக் காணொளி எடுத்துக்கொண்டார்.

அக்டோபர் 13-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளியில், ரமடான் தாம் விமானத்தை ஓட்டப்போவதாகக் கூறுகிறார்.

பின்னர், அவர் துணை விமானியின் இருக்கையில் அமர்ந்து விசையைப் பிடிப்பது தெரிகிறது.

எகிப்தின் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, விமானம் விண்ணில் பறந்துகொண்டிருக்கும்போது பொதுமக்கள் விமானி அறைக்குள்
நுழையக்கூடாது.

இதனால், ரமடானைத் துணை விமானி இருக்கையில் அமரவிட்ட தலைமை விமானிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துணை விமானிக்கு ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் இந்தப் பிரச்சினையால் பதவி விலக நேரிட்டுள்ளது.

ஒரு பிரபலத்தின் சில நிமிட மகிழ்ச்சிக்காக எத்தனை பேருக்கு எவ்வளவு சிரமம் என்று வருந்துகின்றனர் இணையவாசிகள் !


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்