Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எப்போது உடற்பயிற்சி செய்தால்... அதிகப் பயன் தெரியும்?

உடற்பயிற்சி செய்தும், பலன் தெரியவில்லையா?

வாசிப்புநேரம் -
எப்போது உடற்பயிற்சி செய்தால்... அதிகப் பயன் தெரியும்?

(படம்: Pixabay)

உடற்பயிற்சி செய்தும், பலன் தெரியவில்லையா?

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால், அதிகப் பலன் தென்படும் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொதுவாக, எந்த உடற்பயிற்சி செய்தாலும், ஒவ்வொருவருக்கும் தென்படும் பலன் வேறுபடும்.

ஒவ்வொருவரின் உடல்வாகு, மரபணு, உணவு முறை ஆகியவற்றின் அடிப்படையில் பலன் வேறுபடும் என்று எண்ணப்படுகிறது.

இருப்பினும், அதில் உணவு உட்கொள்ளப்படும் நேரமும் பெரிய பங்கு வகிக்கிறது என்று New York Times நாளேடு தெரிவித்துள்ளது.

உடற்பயிற்சி செய்யும்போது, அதற்குத் தேவையான சக்தி, அண்மையில் உண்ட உணவிலிருந்து அல்லது உடலில் எற்கனவே இருக்கும் கொழுப்பிலிருந்தும் சர்க்கரையிலிருந்தும் வரும்.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் ஆடவர்கள், சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்யும் ஆடவர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆய்வில், ஒரே அளவிலான கலோரிகளை இழந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும் உணவருந்தி விட்டு உடற்பயிற்சி செய்தவர்களைவிட வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தவர்கள் இருமடங்குக் கொழுப்பை இழந்ததாக New York Times தெரிவித்தது.

அன்றாட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன், அதிகாலை வேளையில் உடற்பயிற்சி செய்வதும், சாப்பிட்டதற்கு வெகு நேரம் கழித்து உடற்பயிற்சி செய்வதும் சிறப்பு என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்