Images
  • 911 Pizza
    (படம்: Pixabay)

அதிகாரிகளைப் பிணை பிடித்து, 'பீட்ஸா' கொடுத்தால் விடுவிப்பதாகச் சொன்ன கைதிகள்

சுவீடனிலுள்ள எஸ்கில்ஸ்டூனா (Eskilstuna) நகரிலுள்ள சிறைச்சாலையைச் சேர்ந்த இரு கைதிகள், பாதுகாவல் அதிகாரிகளை விடுவிக்கப் 'பிணைப்பீட்ஸா' கோரியிருக்கின்றனர்.

கைதிகள் இருவரும் கொலைக் குற்றவாளிகள்.

அவர்கள் நேற்று, பிற்பகல் நேரத்தில் அதிகாரிகளுக்கான இடத்துக்குள் எப்படியோ நுழைந்தனர்.

அங்கு இருந்த இரு அதிகாரிகளை அவர்கள் பிணைபிடித்தனர்.

அதிகாரிகளை விடுவிக்க அவர்கள் கேட்டது பணமோ நகையோ அல்ல.....20 பீட்ஸாக்களை (pizza). அதோடு, தப்பிச் செல்ல, அவர்கள் ஹெலிகாப்டர் ஒன்றையும் கேட்டனர்.

பீட்ஸாக்கள் அவர்களைச் சென்றடைந்தது. அவர்களும் அதிகாரிகளை விடுவித்தனர்.

பிணை பிடிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கும் எந்தவிதமான காயங்களும் இல்லை.

பிணைத்தொகை கேட்ட இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   

Top