Images
  • tiktok
    (படம்: AFP/Chris DELMAS)

TikTok, WeChat செயலிகளைத் தடைசெய்யும் திட்டத்தைக் கைவிட்ட அமெரிக்கா

சீனாவின் TikTok, WeChat செயலிகளைத் தடைசெய்வதற்கான திட்டத்தை அமெரிக்கா கைவிட்டுள்ளது.

முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகளை அதிபர் ஜோ பைடன் ரத்துசெய்திருக்கிறார்.

தேசியப் பாதுகாப்பைக் காரணமாகக் கூறி TikTok, WeChat செயலிகளுக்குத் தடை விதிக்கத் திரு. டிரம்ப் முனைந்தார்.

பைடன் நிர்வாகம், அந்தப் பிரபலச் செயலிகளுக்குத் தடை விதிப்பதற்குப் பதிலாக, வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான இணையச் செயலிகள் ஏற்படுத்தக்கூடிய அபாயம் குறித்து ஆராயவிருக்கிறது.

புதிய அறிவிப்பு குறித்து TikTok, WeChat செயலிகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் இதுவரை கருத்துரைக்கவில்லை.

-AFP

Top