Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அனுமதியின்றிப் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்தது

அமெரிக்காவிலுள்ள சியெட்டல் - டகோமா அனைத்துலக விமான நிலையத்தில் (Seattle-Tacoma international airport) அனுமதியின்றி விமானம் ஒன்று கிளம்பியதன் காரணமாக மற்ற விமானங்கள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.  

வாசிப்புநேரம் -
அனுமதியின்றிப் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்தது

( படம்: REUTERS )

அமெரிக்காவிலுள்ள சியெட்டல் - டகோமா அனைத்துலக விமான நிலையத்தில் (Seattle-Tacoma international airport) அனுமதியின்றி விமானம் ஒன்று கிளம்பியதன் காரணமாக மற்ற விமானங்கள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

அந்த Horizon Air Q400 ரக விமானத்தில் 78 இருக்கைகள் உள்ளன.

ஆனால் விமானம் அனுமதியின்றிப் புறப்பட்டபோது அதில் பயணிகள் யாருமில்லை.

சம்பவம் பயங்கரவாதச் சம்பவமாக இருப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என்று காவல்துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை ஓட்டிய நபர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் விமானத்தைச் செலுத்தியதாக நம்பப்படுகிறது.

அனுமதியின்றி அந்தப் பயணிகள் விமானம் திடீரென்று புறப்பட்டுச் சென்றதும், அதனைப் பின்தொடர போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

விமான நிலையத்தின் அருகே விமானம் சுற்றிச் சுற்றிப் பறப்பதைச் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் காட்டுகின்றன.

இறுதியில் விமானம் கடலினுள் விழுந்தது. விமானத்தைச் செலுத்திய விமானி, அநேகமாக விபத்தில் மாண்டு போயிருப்பார் என்று அதிகாரிகள் கூறினர்.

தற்போது சியெட்டல் - டகோமா விமான நிலையத்தில் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்