Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தின் காணொளியைப் பதிவுசெய்தவர் கைது

டெஹ்ரான் விமான நிலையம் அருகே வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தை ஏவுகணை தாக்கிய காணொளியைப் பதிவுசெய்தவரைக் கைதுசெய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தின் காணொளியைப் பதிவுசெய்தவர் கைது

(படம்: AFP/STR)


டெஹ்ரான் விமான நிலையம் அருகே வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தை ஏவுகணை தாக்கிய காணொளியைப் பதிவுசெய்தவரைக் கைதுசெய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

BBC அளித்த தகவல்படி, தேசியப் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குவார் என நம்பப்படுகிறது.

ஆனால், அந்தக் காணொளியை முதலில் பதிவேற்றிய ஈரானியச் செய்தியாளர், தமக்கு அதை அனுப்பிய நபர் பாதுகாப்பாய் இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஈரானிய அதிகாரிகள், தவறான நபரைக் கைது செய்திருப்பதாக லண்டனில் வசிக்கும் அவர் சொன்னார்.

PS752 விமானம் கடந்த புதன்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 176 பேரும் அதில் மாண்டனர்.

தவறுதலாக விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், அது தொடர்பாக சிலரைக் கைதுசெய்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று ஈரானிய அதிபர் ஹசான் ரூஹானி தெரிவித்துள்ளார்.

விமானத்தை ஏவுகணை தாக்கியதை ஈரான் முதலில் மறுத்தது.

ஆனால் பின்னர் அது தனது ராணுவம் தவறுதலாக அந்தத் தாக்குதலை நடத்தியதை ஒப்புக்கொண்டது.

காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டபோது விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக நிபுணர்கள் கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்