Images
  • plastic store
    படம்: REUTERS 

பார்ப்பதற்கு அசல் மளிகைக்கடையைப் போல் இருக்கும்....ஆனால் மளிகைக்கடை இல்லை...

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு வித்தியாசமான மளிகைக்கடை திறக்கப்படவிருக்கிறது.

ஆனால் அது உண்மையில் கடை அல்ல.

Plastic Bag Store என்ற அந்தக் கடையில் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பொருள்கள் இருந்தாலும், அவற்றின்மீது "பிளாஸ்டிக்- crapa", "பழைய தகவல் பதிவுத்தகடு" என்பன போன்ற வாசகங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் அந்தக் கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

படைப்பைப் பார்க்க அசல் மளிகைக் கடையைப் போன்று இருப்பதால், மக்கள் கடைக்குச் செல்வர்: அப்போது பிளாஸ்டிக் பொட்டலங்களால் ஏற்படும் கழிவைப் பற்றி அவர்கள் எண்ணிப்பார்ப்பார்கள் என்று படைப்பின் கலைஞர் தெரிவித்தார்.

வரும் புதன்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை, மூன்று வாரங்களுக்குக் கலைப்படைப்புகளை மக்கள் சென்று காணலாம். சிறு சிறு குழுக்களாக அவர்கள் அனுமதிக்கப்படுவர்.

நியூயார்க் மாநிலத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

அந்த மாநிலத்தில் ஆண்டுதோறும் 23 பில்லியனுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

Top