Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால், தென்கிழக்காசிய நாடுகளுக்கு, ஆண்டுக்கு 6 பில்லியன் டாலர் இழப்பு

மறுபயனீடு செய்வதற்குப் பதில், ஒரு முறை  பயன்படுத்தித் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டால், தென்கிழக்காசிய நாடுகள் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலரை இழப்பதாக உலக வங்கி  தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

மறுபயனீடு செய்வதற்குப் பதில், ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டால், தென்கிழக்காசிய நாடுகள் ஆண்டுக்கு 6 பில்லியன் டாலரை இழப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அதுகுறித்து Bloomberg செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியா, தாய்லந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் மறுபயனீடு செய்யக்கூடிய பிளாஸ்டிக்கில்
75 விழுகாட்டிற்கும் அதிகமானவை வீணாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதனால், சுழற்சிப் பொருளியல் மூலம் கிடைக்கக்கூடிய வர்த்தக வாய்ப்புகள் சரியாக பயன்படுத்தப்படாமல் போகின்றன என்று கூறப்பட்டது.

பிளாஸ்டிக் மறுபயனீட்டுக்கான வர்த்தக மாதிரியை உருவாக்குவதன் மூலம், குப்பை நிரப்பும் இடங்களிலிருந்து கழிவுகளை திசைதிருப்ப முடியும் என்று உலக வங்கி தெரிவித்தது.

மேலும் அது நீர்வழிகளில் கசியும் அபாயத்தை குறைக்கின்றது என்றும் வங்கி கூறியதாக Bloomberg செய்தி தெரிவித்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்