Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2030ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க முன்வந்துள்ள 170 நாடுகள்

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க 170 நாடுகள் முன்வந்துள்ளன.

வாசிப்புநேரம் -
2030ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க முன்வந்துள்ள 170 நாடுகள்

(படம்: Najeer Yusof/TODAY)

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க 170 நாடுகள் முன்வந்துள்ளன.

கென்யாவின் தலைநகர் நைரோபியில் ஐந்து நாட்களுக்கு நடைபெற்ற ஐக்கிய நாட்டு நிறுவனச் சுற்றுச்சூழல் பேரவையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

பேரவையின் முடிவில் பிளாஸ்டிக் பைகள் போன்ற தூக்கிவீசும் பொருள்களைப் பற்றிய பின்பற்றக் கட்டாயமில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு முறை பயன்படுத்திய பின்னர் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்கை 2025ஆம் ஆண்டுக்குள் கட்டங்கட்டமாக அகற்ற தொடக்கத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்த்தன.

எல்லா உறுப்பு நாடுகளுக்கும் ஏற்ற தீர்வைக் கண்டறிவது சிரமம் என்று பேரவையின் தலைவர் சீம் கீஸ்லர் (Siim Kiisler) தெரிவித்தார்.

வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல் உறுதியான கடப்பாடுகளை முன்வைக்க வேண்டும் என்றார் அவர்.

மாநாட்டில் 4,700க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்