Images
  • png apec cars (1)
    (படம்: AFP/MARCO BERTORELLO)

ஏபெக் மாநாட்டிற்காக வாங்கப்பட்ட சொகுசுக் கார்கள் - குமுறும் பாப்புவா நியூ கினி மக்கள்

பாப்புவா நியூ கினி: அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசியப் பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டுக்குத் தயாராகி வருகிறது பாப்புவா நியூ கினி.

அதற்காக 40 Maserati சொகுசுக் கார்கள் வாங்கப்பட்டுள்ளன.

வறுமையான பாப்புவா நியூ கினி சொகுசுக் கார்களை வாங்கியது தேவையற்ற செலவு என்று அங்குள்ள மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

காசநோய், இளம் பிள்ளை வாதம் போன்ற நோய்கள் மீண்டும் அங்கு தலைதூக்கி வரும் வேளையில் மாநாட்டுக்காக சொகுசுக் கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு காரின் விலை சுமார் 150,000 டாலர்.

இத்தாலியில் தயாரிக்கப்பட்ட கார்கள், இரண்டு விமானங்களில் பாப்புவா நியூ கினிக்குக் கொண்டுவரப்பட்டன. அது பற்றிய படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அவற்றைப் பார்த்த பலரும் ஆத்திரத்தில் குமுறுகின்றனர்.

ஆனால், சொகுசுக் கார்களை வாங்கியது சரியான முடிவு என்று ஏபெக் மாநாட்டின் அமைச்சர் கூறியுள்ளார்.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் உலகத் தலைவர்களின் பயன்பாட்டுக்காக சொகுசுக் கார்கள் வாங்குவது உலக வழக்கம். மாநாடு முடிந்த பின்னர் அவை விற்கப்படும்.

இப்போதே அந்த சொகுசுக் கார்களை வாங்க பலர் முன்வந்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

Top