Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பருவநிலை மாற்றம்: கண்டுகொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம், நாடுகள் எச்சரிக்கை

பருநிலை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து வரும் அரசாங்கங்களுக்கு இடையிலான குழு 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் பயன்பாட்டை பாதியாகக் குறைக்க இலக்கை வகுத்துள்ளன.  

வாசிப்புநேரம் -
பருவநிலை மாற்றம்: கண்டுகொள்ளாவிட்டால் அழிவு நிச்சயம், நாடுகள் எச்சரிக்கை

(படம்: AFP)

பருவநிலை மாற்றம் தொடர்பான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், அழிவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனப் பல நாடுகள் எச்சரித்துள்ளன.

பருவநிலை மாற்றம் தொடர்பாக, போலந்தில் நடைபெறும் சந்திப்பில் அவை அவ்வாறு கூறின.

உலகின் சில பகுதிகளில் வெள்ளம், வறட்சி, கடும் புயல், போன்றவை பரவலாக ஏற்படுவதால், இனியும் காத்திருக்க முடியாது என்று அவை கூறுகின்றன.

சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இன்னும் 12 மணி நேரத்தில் மாநாடு நிறைவுறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பேராளர்கள் எந்த முக்கிய உடன்பாட்டையும் எட்டவில்லை.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நாடுகள் எவ்வாறு பயன்படுத்தவிருக்கின்றன என்பது குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது.

பருநிலை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து வரும் அரசாங்கங்களுக்கு இடையிலான குழு 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் பயன்பாட்டை பாதியாகக் குறைக்க இலக்கை வகுத்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்