Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பசிக்காகத் தொலைதூரம் சென்ற பனிக்கரடி

குளிர்மிக்க ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் ஒரு பனிக்கரடி பசியில் வாடியது.

வாசிப்புநேரம் -
பசிக்காகத் தொலைதூரம் சென்ற பனிக்கரடி

(படம்: Reuters)

குளிர்மிக்க ஆர்க்டிக் பகுதியில் இருக்கும் ஒரு பனிக்கரடி பசியில் வாடியது.

உணவுக்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து ரஷ்யாவை நேற்று (ஜூன் 19) சென்றடைந்தது.

அந்த இடம் சைபீரியாவில் உள்ள நோரில்ஸ்க் (Norilsk) நகரம்.

மிகச் சோர்வடைந்த அந்தப் பெண் கரடி நோரில்ஸ்க் நகரின் புறநகர்ப் பகுதியில் பல மணிநேரம் தரையிலேயே படுத்திருந்தது.

கரடியின் கால்கள் அனைத்திலும் சேறு. அது அவ்வப்போது எழுந்து உணவுக்காக முகர்ந்து பார்த்தது.

நகரவாசிகள் கரடியைப் பார்க்கத் திரண்டனர்.

கரடி வழிதவறி நகருக்குள் நுழைந்திருக்கலாம் என்று வனவிலங்கு ஆய்வாளர்கள் கூறினர்.

பசியால் களைப்படைந்த பனிக்கரடி மீண்டும் ஆர்க்டிக் பகுதிக்கு அனுப்பிவைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

நகரில் இவ்வாறு பனிக்கரடியைக் கண்டு 40 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பனிக்கரடியைப் பார்க்கத் திரண்டவர்கள் படமெடுத்துக் கொண்டனர்.

யாரும் அதற்கு அருகில் செல்லாமல் காவல்துறையினர் பார்த்துக்கொண்டனர்.

கடைசிவரை பனிக்கரடியின் பசியை மட்டும் யாரும் ஆற்றியதாகத் தெரியவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்