Images
  • polar bears (1)
    (படம்: AFP / Max STEPHENSON)

ரஷ்யக் குடியிருப்பினுள் புகுந்த பனிக்கரடிகள் - அச்சத்தில் பதுங்கும் மக்கள்

ரஷ்யாவின் ஆர்க்டிக் துருவப்பகுதியிலுள்ள சிறிய இராணுவக் குடியிருப்பில் சுமார் 52 பனிக்கரடிகள் புகுந்துள்ளன.

பனிக்கரடிகளின் தாக்குதலுக்கு அஞ்சி குடியிருப்பாளர்கள் வீட்டுக் கதவுகளைத் திறக்கவோ பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவோ தயங்குகின்றனர்.

பெலுஷ்யா குபா (Belushya Guba) எனும் அக்குடியிருப்பில் பனிக்கரடிகள் மக்களைத் தாக்கின.

வீடுகளிலும் பள்ளிகளிலும் பனிக்கரடிகள் புகுந்ததால், அங்கு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்க்டிக் பனிப்பாளங்கள், உலக வெப்ப உயர்வால் உருகி வாழ்விடம் சுருங்கிவருவதால், பனிக்கரடிகள் மனிதக் குடியிருப்புக்குள் புகுந்ததாக நம்பப்படுகிறது.

ரஷ்யாவில் பனிக்கரடிகள் அரிய வகை விலங்கினமாகப் பாதுகாக்கப்படுவதால் அவற்றைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, பனிக் கரடிகளைச் சுட்டுக் கொல்லும்படி சில குடியிருப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க, பனிக்கரடிப் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பனிக்கரடிகள் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து அவ்வப்போது பெலுஷ்யா குபாவுக்குள் புகுந்து குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி வருகின்றன. 


Top