Images
  • polar bears (1)
    (படம்: AFP / Max STEPHENSON)

ரஷ்யாவில் பனிக்கரடிகளால் நெருக்கடிநிலை

ஆர்க்டிக் பகுதியிலுள்ள ரஷ்யாவுக்குச் சொந்தமான பகுதியில் பல பனிக்கரடிகள் வீடுகள், கட்டடங்களுக்குள் புகுந்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து, அந்த வட்டாரத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3,000 பேர் அங்கு வசித்து வருகின்றனர்.

பனிக்கரடிகளின் ஊடுருவலைச் சமாளிக்க அங்கு வசிப்பவர்கள் அதிகாரிகளிடம் உதவி கோரியிருக்கின்றனர்.

பனிக்கரடிகளைச் சுடுவதற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

பனிக்கரடிகளின் அண்மை ஊடுருவல் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உலகில் வெப்பநிலை அதிகரிப்பதால், ஆர்க்டிக் பனிக்கட்டிகள் உருகி வருகின்றன.

அந்தக் காரணத்தால், பனிக்கரடிகள் நிலத்தில் அதிக நேரம் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

உணவுக்கும் அவை திண்டாடுகின்றன.

Top