Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஏழை நாடுகளின் கடன்கள் 12 விழுகாடு அதிகரித்துள்ளது: உலக வங்கி

உலக வங்கி, ஏழை நாடுகளின் கடன்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு 12 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஏழை நாடுகளின் கடன்கள் 12 விழுகாடு அதிகரித்துள்ளது: உலக வங்கி

(படம்: AFP/Alfredo Zuniga)

உலக வங்கி, ஏழை நாடுகளின் கடன் முன்னெப்போதும் இல்லாத அளவு 12 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவித்துள்ளது.

நோய்ப்பரவல் காரணமாக, குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளின் கடன் 860 பில்லியன் டாலருக்கு உயர்ந்ததாக அது குறிப்பிட்டது.

கடன் அளவைக் குறைக்க உடனடி முயற்சிகளுக்கு உலக வங்கி அழைப்பு விடுத்தது.

குறைந்த, நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளின் கடன் கணிசமாக அதிகரிக்கும் என்று அடுத்த ஆண்டுக்கான அனைத்துலகக் கடன் புள்ளவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்த தகவல்களை, உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

நிலையான கடன் அளவுகளை அடைய நாடுகளுக்கு உதவ, இன்னும் விரிவான முயற்சிகள் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

பொருளியல் மீட்சி, குறைந்த வறுமை ஆகியவற்றை அடையவும் அவை அவசியம் என்றார் திரு. மல்பாஸ்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்