Images
  • Pope Francis
    (படம்: Handout/VATICAN MEDIA/AFP)

தேவாலயங்களில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் - பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும்: போப் ஃபிரான்சிஸ்

தேவாலயங்களில் நடத்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் துயரக்குரலுக்கு வத்திகன் செவிசாய்க்கும் என்று போப் ஃபிரான்சிஸ் (Pope Francis) கூறியிருக்கிறார்.

பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் வத்திகனில் முக்கிய மாநாடு ஒன்றைத் தொடங்கிவைத்தபோது அவர் அவ்வாறு கூறினார்.

பல ஆண்டுகளாக நடந்துவரும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அத்தகைய சம்பவங்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளைக் கண்கூடாகப் பார்க்க விரும்புவதாக அவர் சொன்னார்.

Top