Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இளையர்களை வருங்காலச் சவால்களுக்குத் தயார்ப்படுத்தும் சந்திப்புக்குப் போப் அழைப்பு

வத்திகனில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு உலகெங்குமுள்ள அரசியல், கலாசார, சமயத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் போப் ஃபிரான்சிஸ்.

வாசிப்புநேரம் -
இளையர்களை வருங்காலச் சவால்களுக்குத் தயார்ப்படுத்தும் சந்திப்புக்குப் போப் அழைப்பு

(படம்: REUTERS/Remo Casilli)

வத்திகனில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு உலகெங்குமுள்ள அரசியல், கலாசார, சமயத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் போப் ஃபிரான்சிஸ்.

பொருளியல், சுற்றுப்புற, சமூக ரீதியான சவால்களைச் சமாளிக்க இளையர்களைத் தயார்ப்படுத்தும் முயற்சிகளைப் பற்றிக் கலந்துபேசும் நோக்கத்தோடு, 'Reinventing the Global Educational Alliance' எனும் அந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 14ஆம் தேதி அது வத்திகனில் இடம்பெறும்.

அதற்கு முன், மாநாடு தொடர்பான கருத்தரங்குகள் இடம்பெறும்.

மனித உரிமை மற்றும் அமைதி, சமயங்களுக்கு இடையே உரையாடல், குடிபெயர்வு, சுற்றுப்புறப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை ஒட்டிக் கருத்தரங்குகள் நடக்கும்.

சந்திப்பில் கலந்துகொள்ள யாருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பதைப் போப் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

போப் ஃபிரான்சிஸ்ஸின் 'Laudato Si' கடிதம் வெளியிடப்பட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் விதத்தில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

சுற்றுப்புறத்தைப் பாதுகாத்து, உலக வெப்பமயத்தைச் சமாளிக்க அந்தக் கடிதம் அழைப்பு விடுத்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்