Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விளம்பர அழகியின் படத்திற்கு போப்பின் மாயமான 'விருப்பக் குறி' - விசாரிக்கும் Instagram

உள்ளாடை விளம்பர அழகி ஒருவரின் படத்திற்கு போப் பிரான்சிஸின் (Pope Francis) அதிகாரபூர்வ Instagram கணக்கின் மூலம் விருப்பக் குறி (like) அளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் Instagram விசாரித்துவருகிறது.

வாசிப்புநேரம் -
விளம்பர அழகியின் படத்திற்கு போப்பின் மாயமான 'விருப்பக் குறி' - விசாரிக்கும் Instagram

(படம்: Vatican Media/?Handout via REUTERS)

உள்ளாடை விளம்பர அழகி ஒருவரின் படத்திற்கு போப் பிரான்சிஸின் (Pope Francis) அதிகாரபூர்வ Instagram கணக்கின் மூலம் விருப்பக் குறி (like) அளிக்கப்பட்டிருப்பது தொடர்பில் Instagram விசாரித்துவருகிறது.

அது எவ்வாறு நேர்ந்தது என்று Instagram-இடம் வத்திகன் (Vatican)கேள்வி எழுப்பியது.

பிரேசிலிய விளம்பர அழகி நேட்டாலிய காரிபோட்டோவின் (Natalia Garibotto) படத்திற்கு போப்பின் கணக்கின் மூலம் விருப்பக் குறி அளிக்கப்பட்டிருப்பது குறித்து, சில நாள்களுக்கு முன் தெரியவந்தது.

இருப்பினும், அந்தப் படத்திற்கு வத்திகன் விருப்பக் குறி வழங்கவில்லை என்று கூறியது.

போப்பின் அனைத்து சமூக ஊடகக் கணக்குகளும் ஒரு தொடர்பு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

கணக்கு ஊடுருவப்பட்டதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

அதனையொட்டி Instagram விசாரணை நடத்தி வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்