Images
  • Popemobile
    (படம்: Papa Francesco Amiche/ Facebook)

போப் ஃபிரான்சிஸுக்குப் புதிய கார்


போப் ஃபிரான்சிஸ் வசதியாகப் பயணம் செய்வதற்காக புதிய கார் ஒன்றை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துள்ளது Dacia நிறுவனம்.

போப்பிற்குக் கொடுக்கப்பட்டுள்ள Dacia Duster எனும் அந்தக் காரைப் பற்றி BBC தெரிவித்துள்ளது.

Renault கார் நிறுவனத்தின் துணை நிறுவனமான Dacia அந்தக் காரை போப்பிற்காகச் சிறப்பாக வடிவமைத்துள்ளது.

காரின் பின்னிருக்கை அவருக்கு வசதியான முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதோடு காரின் கூரையில் திறக்கப்படக்கூடிய கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் ஊர்வலமாகச் செல்லும்போது மக்களிடம் வணக்கம் தெரிவிக்க போப்பிற்கு அது உதவியாக இருக்கும்.

அவர் எளிதில் வாகனத்தில் ஏறும் வகையிலும் வாகனம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில் Lamborghini போப்பிற்கு Huracan கார் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தது.


 

Top