Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆபாச விளையாட்டுகளின் செயலியைப் பயன்படுத்திய 20,000 பேரின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வந்தன

மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆபாச விளையாட்டுகளின் செயலி ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் அதைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கானோரின் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. 

வாசிப்புநேரம் -

மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆபாச விளையாட்டுகளின் செயலி ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் அதைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கானோரின் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

அந்தக் கோளாறு இப்பொழுது சரி செய்யப்பட்டுள்ளது.

SinVR எனும் அந்த செயலியில் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் அதைப் பயன்படுத்தும் 20,000 பேரின் பெயர்களும் மின்னஞ்சல் முகவரிகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

Digital Interruption எனும் பிரிட்டிஷ் இணையப் பாதுகாப்பு நிறுவனம் அந்தக் கோளாற்றைக் கண்டுபிடித்தது.

கோளாற்றைக் கண்டுபிடித்ததற்காக SinVR இணையப் பாதுகாப்பு நிறுவனம், Digital Interruption நிறுவனத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

தனது செயலியிலுள்ள பாதுகாப்பை மேம்படுத்துவதாகவும் உத்தரவாதம் கொடுத்துள்ளது.

SinVR எனும் நிறுவனத்திற்குச் செயலி சொந்தம்.

செயலியில் உள்ள கோளாற்றைப் பற்றி Digital Interruption, SinVR நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு அது பதில் அனுப்பவில்லை.

அதனால் Digital Interruption தான் கண்டறிந்த தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்